• சற்று முன்

    சென்னை அப்போலோ பேரியாட்ரிக்ஸ் மைய இயக்குநரும், முதன்மை அறுவைச் சிகிச்சை நிபுணருமான பேராசியர் மரு.ராஜ் பழனியப்பன் காஞ்சிபுரத்தில் பேட்டி.



    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் உடல் பருமன் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


    இம்முகாமில்,சென்னை அப்போலோ பேரியாட்ரிக்ஸ் மைய இயக்குநரும், முதன்மை அறுவைச் சிகிச்சை நிபுணருமான பேராசியர் டாக்டர்.ராஜ் பழனியப்பன்,உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மருத்துவப் பரிசோதனைகள்  மேற்கொண்டும், நோய் குறித்த விழிப்புணர்வு, சிகிச்சை முறைகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பல்வேறு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இம்முகாம் மூலம் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர்  மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். இதனைத்தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய உடல் பருமன் மருத்துவ முதன்மை அறுவைச் சிகிச்சை நிபுணர் பேராசியர் டாக்டர்.ராஜ் பழனியப்பன்,உலகம் முழுவதும் உடல் பருமன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்,உலகில் 60%சதவிகித மக்கள் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர் என்றும், இந்தியாவில் நான்கில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



    மேலும் மருந்துகள் மூலம் பொதுவாக 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும் என்றும், சில நோயாளிகளுக்கு நவீன பேரியாட்ரிக் அறுவைச் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையக்கூடும் என்றும்  கூறிய அவர்,ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளால் நோயாளிகள் விரைவில் வீடு திரும்பும் வசதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் உடல் பருமன் காரணமாக மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட குறைந்தது 13 வகையான புற்றுநோய்களின் அபாயம் அதிகரிப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

    மேலும், சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உருவாக்குவது அவசியம் என்றும், உடல் பருமனின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராஜ் பழனியப்பன் வலியுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் பொது மருத்துவர் மரு.நிகிலேஷ் கிருஷ்ணா, ஊட்டச்சத்து நிபுணர் மரு.மரியா மற்றும் காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையம் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad