• சற்று முன்

    காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் முடிவுற்ற கட்டிட பணிகளை திறந்து வைத்த அமைச்சர்கள்.


    காஞ்சிபுரம் மாநகராட்சி, இராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் டாக்டர் P.S.சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் சமூக பங்களிப்பு  நிதியில் (CSR) அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை  மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை  அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.



    காஞ்சிபுரம் மாநகராட்சி டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் KOMATSU  நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.8.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையினை திறந்து வைத்து, இராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் KOMATSU  நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.10.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையினை திறந்து வைத்தார்கள். பின்பு  இராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் KOMATSU  நிறுவனத்தின் சமூக பங்களிப்பு  நிதியில் ரூ. 24.2 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, சிசிடிவி கேமராக்கள், நிழற்குடை போன்ற கட்டமைப்புகளை திறந்து வைத்தார்கள். KOMATSU  நிறுவனத்தாருக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.



    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர்

    ஆர்.குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் இரா.வினோத், 1வது மண்டலக்குழு தலைவர் சசிகலா கணேஷ், SMC  தலைவர் எஸ்இலக்கியா, 10வது வார்டு கவுன்சிலர் மல்லிகா இராமகிருஷ்ணன் KOMATSU நிறுவன துணை பொது மேலாளர் (மனித வளம்) செல்வகுமார், உதவி துணை மேலாளர் கைலாஷ், முதன்மைக் கல்வி அலுவலர் அ.நளினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad