• சற்று முன்

    தாசில்தார் ரப்பர் முத்திரையை போலியாக பயன்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு



    போலி தாசில்தார் ரப்பர் முத்திரை தயாரித்து பூர்வீக நிலத்தை அபகரிக்க மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா கீழசூர் கிராமத்தில் 1, 4/1, 5, 6/1 சர்வே எண்ணில் உள்ள கபீர் முகமது ஆகிய எனக்கும்  என் சகோதரர்களுக்கும் சொந்தமான பூர்விக நிலத்தை சுகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் அசோக் குமார், மணவாளன் ஆகியோர் அபகரிக்க தொடர்ந்து முயற்ச்சித்து வருகிறார்கள்.

    எங்கள் நிலத்தை அபகரிக்க அராஜகம் வன்முறை மிரட்டல் செய்து வருகிறார்கள் மேலும் சுகுமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது மேலும் மேலும் இவர்கள் எங்கள் நிலத்தை அபகரிக்க போலி பட்டா மற்றும்  வேலூர் போலி தாசில்தார் ரப்பர் முத்திரையை தயாரித்து எங்கள் பூர்வீக நிலத்தை அபகரிக்க முயற்ச்சித்து மோசடியில் ஈடுபட்டு வரும் சுகுமார் மற்றும் அவர் சகோதரர்கள் மற்றும்

    கிரிமினல் குற்றங்களுக்கு  உடந்தையாக செயல் படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  மேலும் தொடர்ந்து எங்கள் குடும்பத்தினர் உயிருக்கும் மற்றும் சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் சுகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களிடம் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad