சுகாதார நிபுணர்களின் கருணை சோர்வும் மருத்துவ மனிதமும் " குறித்த விழிப்புணர்வு மருத்துவக் கருத்தரங்கம்.
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (GAAMCH & RI), காரப்பேட்டை ,காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு அறுவை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் (TASO) இணைந்து தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு *கருணை சோர்வும் மருத்துவ மனிதமும்* (Compassion Fatigue among Health Care Professionals) என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வி (CME) மற்றும் பணிமனை (Workshop) கருத்தரங்கு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சி ஜூலை 25 (சனிக்கிழமை) காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவமனையின் இயக்குநர், பேராசிரியர் மரு.எஸ். சரவணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.அறுவை புற்றுநோயியல் துறைத்தலைவர் பேராசிரியர்.மரு. சுப்பையா சண்முகம் தலைமை தாங்கினார். *மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் நெடு நாள் நோய்களின்(Chronic Health Diseases) துயர் தணிப்பில் ஏற்படும் 'கருணை சோர்வு' (Compassion Fatigue) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருத்துவர்களின் நலப் பாதுகாப்பையும் சேவைத்திறனையும் மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்*
கருத்தரங்கில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மரு.எம். மலையப்பன் சிறப்புரை ஆற்றினர். காஞ்சிபுரம் மனநல மருத்துவர் மரு.மரியா ஆண்டனி, மற்றும் அடையாறு புற்று நோய் நிறுவன புற்றுநோய் உளவியல் துறைத் தலைவர் முனைவர் சுரேந்திரன் வீரையா விரிவுரை வழங்கினர். தொடர்ந்து, லயோலா கல்லூரி முனைவர் டி. கிறிஸ்டியானாதலைமையில், அண்ணா புற்றுநோய் மருத்துவமனை புற்று நோயர் உளவியல் துறை டாக்டர் சதிஷ், திருமதி ஜெயஸ்ரீ இணைந்து சுகாதார வல்லுநர்களுக்கு செயல்முறைப் பயிற்சி(Workshop) நடத்தினர்.இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார நிர்வாகிகள் பலர் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 100 பேர் பங்கேற்றனர் .
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. T.D. பாலமுருகன் ,மூத்த உதவிப் பேராசிரியர் அவர்கள் இந்த கருத்தரங்கினை ஒருங்கிணைந்து நடத்தினார் .உள்ளுறை மருத்துவர் மரு. சிவகாமி நன்றி வாழ்த்து தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை