திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் இன்று திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் confederation of Indian industry (CII) மூலம் BorgWarner cooling system நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் கான்ஃபிடரேசன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரி (confederation of Indian industry) (CII) மூலம் போர்னோர் கூலிங் சிஸ்டம் (BorgWarner cooling system) நிறுவனம் சமூக பங்களிப்பு நிதி பழுதடைந்த பழைய அங்கன்வாடி மையத்தினை அகற்றி ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க முன் வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியுடன் இந்த அங்கன்வாடி மையம் புதிதாக கட்டப்பட்டது. சுமார் 800 சதுர அடி பரப்பளவில் மையம், வகுப்பறை, சமையலறை, தனியாக கழிப்பறை மற்றும் குழந்தைகள் விளையாட பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் நிறுவனம் அமைத்துக் கொடுத்தது. புதிய அங்கன்வாடி மையத்தை இன்று மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் திறந்து வைத்து, மையத்தில் குழந்தைகளுடன் குத்து விளக்கு ஏற்றினார். அங்கன்வாடி மையத்தை மிகச் சிறப்பாகவும், நல்ல வசதிகளுடன் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதற்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் அவர்களை பாராட்டி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.பார்த்திபன் , திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.என்.ரேகா நரேஷ்குமார், CII தலைவர் திரு.எஸ்.நரசிம்மன், BorgWarner நிறுவன மேலாண்மை இயக்குனர் திரு.சைலேஷ் ஜா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.பவானி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை