காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற வனத்த்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார்.
காஞ்சிபுரத்தில் த.வெ.க.,வின் வெற்றிக்கு பாடுபட்ட மதன்குமார் முதல் வரிசையில் அமரவைத்து அழகு பார்த்தார் வனத் துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித்குமார்
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாளையொட்டி, த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் முதல் வரிசையில் மாற்றுத்திறனாலி வாலிபரை அமர வைத்து அழகு பார்த்தார், வனத்த்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார். காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், த.வெ.க., சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சிபுரம் நகர செயலாளர் மொயிதீன் தலைமை தாங்கினார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் தென்னரசு, வனத் துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றனர்.
த.வெ.க.,வின் கொள்கை பரப்பு இணை செயலாளர் லையோலோ மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தமிழக அரசு 55 நாட்களின் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,வினரால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசும்போது; 'காஞ்சிபுரம் பஸ் நிலையம் மூச்சு முட்டும் அளவுக்கு தினம் - தினம் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மாறி மாறி பேசி வந்தது தான் மிச்சம். நான் அமைச்சராக பொறுப்பேற்ற 40 நாட்களில் காஞ்சிபுரத்திற்கு புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக பொன்னேரிக்கரை அருகே 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து முடித்துள்ளேன். இதற்கான பணிகள் ஒரு சில மாதங்களில் துவங்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியின் வெற்றிக்கு பாடுபட்டவர் மாற்றுத் திறனாளியான மதன்குமார் ஆவார். இவரது கடின உழைப்பால் நான் 15 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த தகவலை எனக்கு அமைச்சர் தென்னரசு தான் தெரிவித்துள்ளார். எனது நேர்முக உதவியாளரார் பொறுப்பையும் வழங்கி உள்ளேன். இந்த பொதுக்கூட்ட மேடையில் வாலிபர் மதன்குமாரை முதல் வரிசையில் அமர வைத்து அழகு பார்க்க நினைத்தேன் அதுவும் நிறைவடைந்தது. கட்சியில் பாடுபடுபவர்களுக்கு பதவிகள் தானாக வந்து சேரும் என்பது மதன்குமார் ஒரு எடுத்துக்காட்டாகும்; ''இவ்வாறு வனத் துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசினார். கூட்டத்தில் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை