காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்குழுவானது ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ததுடன் பல்வேறு துறைகள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பணிகளை உரிய காலத்தில் முடிக்க தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கிட உரிய ஏற்பாடுகளை செய்திட, மின்வாரிய துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நெடுசாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை விரைந்து முடிக்கவும், வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்கு தேவையான பயிர்கடன், நீர்பாசன வசதிகளை அளித்து புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தினை பெருக்கிட தக்க அறிவுரைகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு இணை தலைவர்/ காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா., இ.ஆ.ப., ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹரீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கெ.ரா.திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் /திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா ஞானசேகர், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், எஸ்.டி.கருணாநிதி, குன்றத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், DISHA குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை