காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கே.ஆர்.திவ்யஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளில் சிலர் கூட்டம் தொடங்கியதுமே கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியில் வந்தனர்.இயற்கை விவசாயி மரம்,மாசிலாமணி,உத்தரமேரூர் விவசாயி பெருமாள் உள்ளிட்ட சிலர் திடீரென வெளியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் காட்டுப்பன்றிகள்,பூச்சிகள் தொல்லை,விதைகளுக்கும்,உரங்களுக்கும் மானியங்கள் இல்லாமை, கால்நடை களுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமை போன்ற காரணங்கள் அவதிப்பட்டு வருவதாகவும்,விவாசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சில விவசாயிகள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர்.






கருத்துகள் இல்லை