சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை அருகாமையில் உள்ள புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் அருணாச்சலம் தமிழன் சிலம்ப பயிற்சி பள்ளி மூலம் இலவசமாக கிராம மக்களுக்கு சிலம்பம் பயிற்சி நடத்தி வருகிறார்.
இதில் சிறப்பாக சிலம்பம் சுற்றும் கிராம பள்ளி மாணவ மாணவிகளை கடந்த வாரம் புதுச்சேரி மாநிலத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு போட்டி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாட்டின் நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த குணால், மகேஸ்வர், மித்ரன், ஜனனி, சக்தி ஸ்ரீ, தியாஷினி, லித்திகா, தனஸ்ரீ, லோகஸ்ரீ, சுபாஷினி ஐந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஐந்து பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று ஏழு வெள்ளி பதக்கமும் மூன்று வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கிராம வீரர்களை பாராட்டும் விதமாக அதே பகுதியில் உள்ள சிவன் கோவிலின் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம் எல் ஏ ஜே. முனிரத்தினம் கலந்து கொண்டு வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி பதக்கங்களையும் சான்றிதழ்களும் வழங்கி வீரர்களுக்கு ஊக்குவித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் இடம் அவர்கள் செய்த சாதனையை செய்து காட்டி வாழ்த்து பெற்றனர்,
நிகழ்ச்சியில் பேசிய உத்திரமேரூர் எம்எல்ஏ,
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வருகை தந்திருப்பதாகவும்,
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களை என்ன செய்கிறார்கள் அவர்கள் பணி என்ன என்று கண்காணிக்க வாட்ஸ் அப்பில் தனி குழு ஒன்றை அமைத்து அதில் தமிழ்நாடு முதலமைச்சர் உடன் 108 எம்எல்ஏக்கள் கொண்ட குழு உள்ளது ஒவ்வொரு எம்எல்ஏக்களும் தினந்தோறும் நடைபெற்ற அன்றாட நிகழ்வுகளை எங்கு நடந்தது என குறிப்பிட்டு தினமும் பதிவிட வேண்டும் எனவும் அதனை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்,
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு தொகுதி வாரியாக மக்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் விரைவில் நடைபெறும் என பொதுமக்களிடம் எம் எல் ஏ முன்னிரத்தினம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் சுகாதார விளையாட்டு அகாடமி மாஸ்டர் கல்யாணசுந்தரம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெண்குடி D.ராகுல், கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சந்தோஷ் குமார், கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விஜய சாரதி, புதுப்பேட்டை கிளை செயலாளர் செல்வகுமார், ஏகனாம்பேட்டை கிளை செயலாளர் சதீஷ், கிழக்கு ஒன்றிய மாணவரணி நிர்வாகி பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை