• சற்று முன்

    இரவில் அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கிறீர்களா? செரிமானக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் – டாக்டர் ஐ. சுபா எச்சரிக்கை...!!!

    இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது, புகைப்பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் செரிமானம் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் செரிமான நோய், கல்லீரல் மற்றும் மேம்பட்ட எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் ஐ. சுபா எச்சரித்துள்ளார்

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பில் செரிமான நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


    முகாமில் டாக்டர் ஐ. சுபா பங்கேற்று, உணவு விழுங்குவதில் சிரமம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலம், கல்லீரல் மற்றும் கணைய நோய்கள், மஞ்சள் காமாலை, குடல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு செரிமான நோய்களுக்கு பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலும், நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இம்முகாமில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். முகாமுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஐ. சுபா,

    இன்றைய இளைஞர்கள் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்பழக்கங்கள் காரணமாக சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாததால் செரிமானக் கோளாறுகள் அதிகரிக்கின்றன என்றார்.

    மேலும்,இரவு முழுவதும் தூங்காமல் செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது உடல்நலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். தூக்கமின்மை காரணமாக செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அமிலச் சுரப்பு உள்ளிட்ட பல்வேறு செரிமான நோய்கள் உருவாகும். எனவே இளைஞர்கள் இரவு நேரங்களில் செல்போன் பயன்பாட்டை குறைத்து, போதிய தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad