• சற்று முன்

    கமிஷன் கரப்ஷன் கட்டிங்" - அவலங்களின் கூடாரமான வாலாஜா நகராட்சி



    நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத நகராட்சி!  "உங்களால முடிஞ்சத பாருங்க" - ஆணவ பேச்சு பேசும் அதிகாரிகள்

    இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் ஊழலும் அலட்சியமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

    என்ன அவலம் நடக்குது?

    1. தரமற்ற சாலை - கமிஷன் கொள்ளை  

    வாலாஜா நகராட்சியில் அமைக்கப்படும் சாலைகள் எல்லாம் பழைய சாலையை பெயர்காமல் அப்படியே மேல போடப்படுது. இதனால சாலையின் உயரம் ஏறி, வீடுகளுக்குள் மழைநீர் புகுது.

    இதற்கு காரணம் கமிஷன், கரப்ஷன், கட்டிங். பழைய சாலையை பெயர்தால் செலவு ஆகும். அதனால் நேரா மேல போட்டு பணத்தை சுருட்டுறாங்க. இதை கண்டுகொள்ள வேண்டிய நகராட்சி இன்ஜினியர் கண்டுகொள்ளவே இல்லை.

    2. நீதிமன்ற தீர்பு + அரசாணையை குப்பையில் போட்ட நகராட்சி  சென்னை உயர் நீதிமன்றம் தெளிவா தீர்ப்பு கொடுத்துள்ளது.  "பழைய சாலையை முழுமையாக பெயர்தெடுத்த பிறகே புதிய சாலை அமைக்க வேண்டும். சாலையின் உயரத்தை உயர்த்தக்கூடாது"  


    இதற்கு ஆதாரமாக தமிழ்நாடு அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் வாலாஜா நகராட்சி ஆணையர் என்ன சொல்றாரு தெரியுமா?  

    "அப்படி எந்த அரசாணையும் இல்ல, எந்த தீர்ப்பும் இல்ல. நாங்க இப்படிதான் சாலை போடுவோம். உங்களால முடிஞ்சத பாருங்க. கலெக்டர்கிட்ட போங்க. ஏன் CM கிட்ட கூட போங்க"  - என சமூக ஆர்வலரிடம் ஆணவமாக கூறியதாக புகார் எழுந்துள்ளது

    3. காண்ட்ராக்டர் ராஜ்ஜியம்  

    அரசு விதிமுறைகளையும் மதிப்பதில்லை. நீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை. கேட்டால் "எங்களுக்கு மேல யாரும் இல்ல" என்ற ரீதியில் பதில்.எந்தெந்த சட்டங்கள் மீறப்படுகின்றன? மீறல் சட்ட பிரிவு தண்டனை

    *நீதிமன்ற அவமதிப்பு* *Contempt of Courts Act, 1971 - Section 2(b)* 6 மாத சிறை + ₹2000 அபராதம்

    *அரசு விதியை மீறி பொது பணம் விரயம்* *Tamil Nadu Municipalities Act, 1920 - Section 57 ஆணையர் மீது துறை நடவடிக்கை + பணி நீக்கம்

    அரசு ஊழியர் நடத்தை விதி மீறல்* *TN Govt Servants Conduct Rules, 1973 - Rule 20(1) Disciplinary Action

    தரமற்ற பணி செய்து அரசு பணம் கொள்ளை**BNS 2023 - Section 316(2) - Criminal Breach of Trust by Public Servant 10 வருடம் வரை சிறை

    ராத்திரி ரவுண்ட்ஸ் கேள்வி - அரசுக்கு

    1.  நீதிமன்றத்தையே அவமதிக்கும் ஒரு நகராட்சி ஆணையர் பதவியில் நீடிக்கலாமா?

    2.  கமிஷனுக்காக மக்கள் உயிரோடு விளையாடும் இன்ஜினியர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

    3.  மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை இதை கண்டுகொள்ள போவது எப்போது?

    எங்கள் கோரிக்கை

    1.  உடனடியாக வாலாஜா நகராட்சியில் போடப்பட்ட அனைத்து சாலைகளையும் 3-வது நபர் தர ஆய்வு செய்ய வேண்டும்.

    2.  நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆணையர் மீது Contempt Petition தொடர வேண்டும்.

    3.  தவறு செய்த காண்ட்ராக்டர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். மக்களே, இது உங்கள் வரிப்பணம். இப்படி கொள்ளையடிக்க விடலாமா?

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad