244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
244 பயனாளிகளுக்கு மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (25.07.2026) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 244 பயனாளிகளுக்கு மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் 155 பயனாளிகளுக்கும், உத்திரமேரூர் வட்டத்தில் 25 பயனாளிகளுக்கும், வாலாஜாபாத் வட்டத்தில் 64 பயனாளிகளுக்கும் என மொத்தம் 244 பயனாளிகளுக்கு இன்று புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கபட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக கட்டாயம் நிறைவேற்றப்படும். காலதாமத காரணத்தை மக்களிடமே அவர் தெரிவித்து வருகிறார். மக்கள் விரும்பும் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. மக்களின் வரிப்பணம் வீணாகாமல் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்களாகிய நீங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி உங்களுக்கான சேவையை செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கட்டாயம் உங்களுக்கான சேவையை செய்ய தயாராக உள்ளோம். உங்களுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவியுங்கள். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவியுங்கள் கட்டாயம் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள் பேசினார்
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து நல்ல ஆட்சியை செய்து வருகிறார்கள். மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம். மக்கள் உங்களுடைய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடமும், மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். உங்களுடைய குறைகள் மீது தீர்வு காணப்படும் இன்று குடும்ப அட்டைகள் பெற்ற பயனாளிகளுக்கு வாழ்த்துகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.முனிரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கெ.ரா.திவ்யஸ்ரீ, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர். திரு.பு.விஜயகுமார், வட்ட வழங்கல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை