• சற்று முன்

    கிரேட் ஃபார்மர்ஸ் மல்டி ஸ்டேட் கோ.ஆபரேட்டிங் சொஸைட்டி நிறுவனத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் Dr.பி.அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது



    திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் வட்டம்  பில்லூர் ஊராட்சி தேவூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிரேட் ஃபார்மர்ஸ் மல்டி ஸ்டேட் கோ.ஆபரேட்டிங் சொஸைட்டி நிறுவனத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவர் Dr.பி.அந்தோனிராஜ் தலைமையில்  நடைபெற்றது.தினேஜ் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நிறுவனத்தின் அமைப்பு முறை,நோக்கம் ,செயல்பாடுகள் குறித்து தலைவர் விளக்கமளித்தார்.

         டெல்டா பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை இலாபகரமாக விற்பனை செய்யவும்,அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்களை மேற்கொண்டு வருமானத்தை பெருக்கவும் உள்ள வாய்ப்புகளைக் கேட்டு விவசாயிகளும்,விவசாய சங்க தலைவர்கள் கந்தவேல் மற்றும் குமுக்கி ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.சொஸைட்டியின் சென்னை மண்டல அமைப்பாளர்  நாஞ்சில் ரவி ,விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் நெல்லை அரிசியாக மதிப்புகூட்டி விற்பதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் தேவையான திட்ட செயல்பாட்டுக்கு வாய்ப்புள்ள நிதி வசதி குறித்து விரிவாக பேசினார்.

           வேளாண் மண்வள விஞ்ஞானியும்,இயற்கை வேளாண்மை மற்றும் ஏற்றுமதி ஆலோசகருமான Dr.மனோகர் கிருஷ்ணா ,வெளிநாட்டில் சந்தைபடுத்துவற்கேற்ற நெல் வகைகள் மற்றும் அவற்றை காவிரி டெல்டா பகுதியின் மண்வகை மற்றும் மண்வளம் ,சாகுபடி தொழில்நுட்பம் போன்றவற்றை விளக்கினார்.

         பொறியாளர் வே.தெய்வசிகாமணி மற்றும் B. சிவகுமார் கூட்டத்தை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தினார். நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.குமாரமங்கலம் விஜயகுமார் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad