காஞ்சிபுரத்தில் பெருந் தலைவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 124 பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 124 பிறந்தநாள் ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் தென்னரசு மற்றும் ஆர்.வீ.இரஞ்சித்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கினர்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்,
இதன்பின் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். இதில் ஏராளமான கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடி உணவு அருந்தி சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் செய்திருந்தார்.






கருத்துகள் இல்லை