• சற்று முன்

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் நடைபெற்றது.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியை அடுத்துள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு பிற்பகல் மூன்று மணியளவில் கொண்டுவரப்பட்டது. 


    அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றது.சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மறைந்த பூமணியின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு பிற்பகல் மூன்று மணியளவில் கொண்டுவரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான பணிகள்  நடைபெற்றது.

    இந்நிகழ்வில் சிறு குறு மற்றும் தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விசு மகாஜன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி நாங்குநேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், திமுக அதிமுக தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு  மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் பூமணி அவர்களின் உடலுக்கு  தமிழக அரசின் சார்பில் காவல்துறையினரின் முழு அணிவகுப்பு மரியாதையுடன் 3 ரவுண்ட்கள் 30 குண்டுகள் முழங்க  அரசு மரியாதை செலுத்தப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்று  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad