கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் பொது மக்களும் லஞ்சம் ஊழல்க்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி,முன்னாள் மாவட்ட இளஞ்சர்,காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட பொது செயலாளர் ராஜாசேகரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், ராஜா,பிரிவு துணை தலைவர் மாரிமுத்து,ஆல்வார்சாமி,காவல் உதவி ஆய்வாளர் வேணுகோபால், வட்டார தலைவர் செல்லதுரை, சுடலைமணி, ஆறுமுகம்,பிரபாகரன்,ராகுல் முருகன், காளியப்பன், காளிராஜ்,நல்லமதி, வேல்சாமி, கோபால், சண்முகவேல், பிச்சைகனி,அந்தோணிமுத்து கிருபாகரன்,அய்யாசாமி, பழனிசாமி, ஆல்வின், பொம்மி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








கருத்துகள் இல்லை