• சற்று முன்

    கையில் கை குழந்தையை தூக்கி வந்து காஞ்சிபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கிய வனத்துறை அமைச்சர் ஆர் வீ. ரஞ்சித் குமார்.



    கையில் கை குழந்தையை தூக்கி வந்து காஞ்சிபுரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கிய வனத்துறை அமைச்சர் ஆர் வீ. ரஞ்சித் குமார்.

    போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கினார்

    தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் இன்று நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. 


    போலியோ சொட்டு மருந்தை துவக்கி வைக்க வருகை தந்த வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமார், இரு குழந்தைகளுடன் வருகை தந்த பெண்மணியிடமிருந்து கைக்குழந்தையை வாங்கி கொண்டு போலியோ சொட்டு மருந்து போடும் இடத்திற்கு கைகளில் தூக்கிக் கொண்டு வந்து தாயையும் குழந்தையும் அமர வைத்து போலியோ சொட்டு மருந்தை போட்டு முகாமினை தொடங்கி வைத்தார். 


    இதனைத் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து போடும் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை போட்டு, கார்ட்டூன் பொம்மை முகமூடிகளையும்,பொம்மை கார்களையும், குழந்தைகளுக்கு பரிசாக வழங்கி அனுப்பி வைத்தார். போலியோ சொட்டு மருந்து முகாமில் மாநகராட்சி ஆணையர் வினோத், மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவர் அருள்மொழி, உள்ளிட்ட அரசு அலுவலர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad