மறைமலைநகரில், முதலமைச்சர் பிறந்தநாள் முன்னிட்டு, சமத்துவ சீமந்தம் விழா - செங்கல்பட்டு எம்.எல்.ஏ., பங்கேற்பு.!
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மறைமலைநகரில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின், 52வது பிறந்தநாள் முன்னிட்டு, மறைமலைநகர் 8வது வார்டு சார்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு சமத்துவ சீமந்தம் விழா நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செள.தியாகராஜன் தலைமை வகித்தார். மறைமலைநகர் நகர செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். மறைமலைநகர் மகளீர் நிர்வாகி தேவி சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, கலந்துக் கொண்ட செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செள.தியாகராஜன் பேசியதாவது : முதலில் அனைத்து பெண் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவை எடுத்து கொள்ளுங்கள். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த பொற்கால ஆட்சியில், தொடங்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடி திட்டம், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கொண்டு வரப்பட்ட திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்பில், உறுதி செய்துள்ளார் நம் முதலமைச்சர். இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளார் என்றார். இதயடுத்து,15 கர்ப்பிணிப் பெண்களும் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டு, சமத்துவ முறையில் சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு மற்றும் சீமந்தம் சடங்குகள் நடத்தி, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தவெக மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலத்துக் கொண்டனர்.






கருத்துகள் இல்லை