• சற்று முன்

    கருங்கல்பாளையம் காவல் நிலையம் - தபால் ஊழியரிடம் குடிபோதையில் தகராறு செய்த நபர்கள் கைது

    20.06.2026-ம் தேதி தபால் துறை ஊழியர் சுரேஷ் என்பவர் தபால் விநியோகம் செய்ய கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகத்தில் உள்ள கமலா நகர் பகுதிக்கு சென்றபோது, அங்கு குடிபோதையில் வந்த நபர்கள் தபால் ஊழியரின் மிதிவண்டியின் பெட்டியில் வைத்திருந்த தபால்களை அவருக்கு தெரியாமல் எடுத்து அருகில் உள்ள சாக்கடையில் எறிந்துவிட்டார். இதுகுறித்து தபால் துறை ஊழியரும் பொதுமக்களும் கேட்ட போது இருவரும் குடிபோதையில் பொதுமக்களிடமும் தகராறில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக தபால் ஊழியர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு


     கருங்கல்பாளையத்தை சேர்ந்த அருண் (எ) கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு எதிரியை அனுப்பவுள்ளனர். குடிபேதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் என சமூக வலைதளங்களில் செய்தி வெளிவந்துள்ளது.


    இவ்வாறு பொது இடத்தில் தகராறு செய்யும் நபர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad