• சற்று முன்

    காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


    காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் மாநில போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இ.பி.கோ.கணேசன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் வேணுகோபால், அண்ணா தொழிற்சங்க சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. ‌சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் பெல்.இரா.தமிழரசன் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகளை குறித்து சிறப்பு உரையாற்றினார்.



    இந்நிகழ்ச்சியில் 

    அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தனபால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் என்.டி.சுந்தர், அண்ணா தொழிற்சங்க பேரவை மண்டல செயலாளர்



    ஆர்.வேணு கோபால், பொருளாளர் எம்.அப்துல் அமீது, கழக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் பட்டூர் இம்தியாஸ்,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ஆலப்பாக்கம் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர்கள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு,எறையூர் முனுசாமி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வெற்றி பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி , ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி ,ராஜு ,எம்.கே. தேவேந்திரன், செந்தில் வேலவன், அமீத் ,மதுரை ஆகியோர் நன்றி உரை கூறினர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad