• சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாம் – நலத்திட்ட உதவிகள் வழங்கல்


    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டு கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் விவசாய அணி சார்பில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ. பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி. நவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முகாமில் சுமார் 27 பேர் இரத்த தானம் செய்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


    மேலும், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் சி. சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் சுமன் ராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மேகலா, காவியா, சுமியா, நவீனராசு, ராகுல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராகுல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ், விவசாய அணி நிர்வாகிகள் குமரேசன், பார்த்திபன், காமேஷ், அசோக், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் கட்சி மாதனூர் மேற்கு ஒன்றியத் தலைவர் சுரேந்தர், மாவட்ட மாணவரணி நிர்வாகி ஜெகத், ஆம்பூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி பொறுப்பாளர் சி. சிலம்பரசன் மற்றும் மருத்துவக் குழுவினரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சி சமூக நலன், மனிதநேயம் மற்றும் பொதுச் சேவையை முன்னிறுத்தும் வகையில் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad