ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய தமிழ்நாடு மருத்துவ வணிகர்கள் சங்கம் சார்பில்போராட்டம்
தமிழ்நாடு மருத்துவ வணிகர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவ வணிக கடைகள் அடைக்கப்பட்டு போராட்டமானது நடைபெற்று வருகிறது
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி ஆன்லைன் மருந்து விற்பனை மூலமாக வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை எளிதில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெற்று போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்படும் எனவும் உயிர் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப விகிதங்களையும் தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திட வேண்டும் எனவும் போலி மருந்துகளில் விற்பனையை தடுத்திட வேண்டும் எனவும் ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கலாச்சார சீரழிவையும் தடுப்பது வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்






கருத்துகள் இல்லை