ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாம் இடம் பிடித்துள்ள தனுஷ்
சோளிங்கர் அருகே 497 மதிப்பெண் பெற்று தனியார் பள்ளி மாணவன் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே செயல்பட்டு வரும் திவ்ய சைத்தன்ய மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்த மாணவர் தனுஷ் இன்று தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் 500 மதிப்பெண்ணிற்கு 497 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்
இந்த நிலையில் பள்ளிக்கு வருகை தந்த மாணவன் தனுஷிற்கு நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கி மாணவனை பாராட்டி ஊக்கப்படுத்தினர் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாம் இடம் பிடித்துள்ள தனுஷ் எதிர்காலத்தில் மருத்துவராக வரவேண்டும் என விருப்பப்படுவதாக தெரிவித்தார்






கருத்துகள் இல்லை