குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஒரு விரல் புரட்சி இதுதானா ?

 


த வெ க வெற்றிக்கு பின் வெளிநாட்டினர் வாக்கு அளித்தார்களா 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளி நாட்டினர் வாக்களித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  தற்போது வரை  சுமார் 27க்கு மேற்பட்டோர் வெளிநாட்டினர் வாக்களித்ததாக தெரிந்த நிலையில் அவர்களை கைது செய்துள்ளனர் காவல் துறை  மேலும் இதே நிலை நீடித்தால் விஜய் அரசியலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது .

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த வெ க பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவின் பேரில் தமிழக முதலமைச்சராக  விஜய் பொறுப்பிலிருக்கிறார். 

ஒரு விரல் புரட்சி 



சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பும் போது விமான நிலையத்தில் பரிசோதனையின் போது வாக்களித்ததற்கான விரலில் மை இருப்பதை கண்டு அவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கையில் மையுடன் வெளி நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை தீவிரமாக  பரிசோதிக்க கூறி . குறிப்பாக சென்னை,திருச்சி,மதுரை,உள்ளிட்ட சர்வ தேச விமான நிலையங்களுக்கு  சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வரை 27 பேர் கைதாகியுள்ளார்.தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்தால் பெரிய சிக்கல் ஏற்படும் .

கைது செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் பேன்கார்ட் இவற்றை கொண்டு விசாரிக்கும் போது பெரும்பாலோர் இலங்கை தமிழர்களே. பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் தங்கி குடியுரிமை பெற்றவர்கள், மேலும் இவர்களிடம் இந்திய முகவரியில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை பயன்படுத்தி சட்ட விரோதமாக  வாக்களித்ததாக தெரிகிறது.

சட்ட நடவடிக்கை பாயும் 

இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS): போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act, 1950): தகுதியற்ற நபர் வாக்களித்தல் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act): விசா விதிமுறைகளை மீறுதல் மற்றும் குடியுரிமையை மறைத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை