ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம்.பி.ஆர்.என் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வினாயகர் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரண்டாம் நாள் யாகசாலை இருந்து மூலவர் ஸ்ரீ கங்கை அம்மாவுக்கு புனித நீர் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
பின்னர் தாய் வீட்டு சீர்வரிசை ஊர்வலம், கல்யாண உற்சவம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர் சாக்த ஸ்ரீ வாராஹிதாசர் குருஜி சுவாமிகள் ஸ்ரீ காளிமைந்தன் சிவா அவர்கள் கலந்துகொண்டு கோயில் கும்பாபிஷேகத்தை விழா தொடங்கி வைத்தார் ஞானமலை கோவில் அர்ச்சகர் சிவ ஸ்ரீ முத்து சிவம், கோவில் கும்பாபிஷேகம் விழா நடத்தி வைத்தார்
பக்தர்களுக்கு மதியம் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா திருப்பணிக்குழு ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






கருத்துகள் இல்லை