• சற்று முன்

    காட்பாடி அடுத்து பசுமாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி 1995,1996 ஆம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு விழா:



    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து பசுமாத்தூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி 1995,1996 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றன. பசுமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு விழா, மிக சிறப்பாகவும், நெகிழ்ச்சியாகவும் நடைபெற்றது. 


    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளி பருவ நண்பர்கள் ஒரே இடத்தில் சந்தித்தது அனைவரது மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தியது. விழாவானது தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. விழாவின் தொகுப்புரையை நீலகண்டன் மற்றும் மோ.ரீனா ஆகியோர் மிகச் சிறப்பாக மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வி.செந்தில்குமார்  அனைவரையும் அன்புடன் வரவேற்றனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காலமான அன்பு ஆசிரியர்களுக்கும்  நம்முடன் பயின்று மறைந்த நண்பர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிறகு மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளிக்கால நினைவுகள் பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவினை முன்னாள் மாணவர்கள் கி.ஆதவன், ஜெ சுகுமார், ஜோ.தாமரை,  மோ. ரீனா,எம். நீலகண்டன், வ. செந்தில் வி.கனேசன், து.ஜெகன்,மதன்,ஜி.யோகனந்தன்,எஸ்.ஹரி கிருஷ்ணன், பு.தீன தயாளன், எ.சதீஷ்குமார், ப. சவிதா, த.ரேகா, ஜெ.ரசித்ரா, தேவிகா, ஞா.கவிதா ஆகியோர்  ஒருங்கிணைந்து மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர். 


    மேலும் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்திருந்த சக நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து விழாவை ஒரு குடும்ப விழாவாக மாறியது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மு. கிருட்டிணன் பேராசிரியர், ஜி.முருகேசன்,ஆசிரியர், கி.ராஜேஸ்வரி ஆசிரியை மற்றும் சி.பால்ராஜ் முன்னாள் ராணுவ கேப்டன் ஆகியோர் வருகை தந்து மாணவர்களை வாழ்த்தி விழாவினை சிறப்பித்தனர். பிறகு முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பள்ளி முன்னேற்றத்திற்காகவும் மற்றும் வளர்ச்சிக்காகவும்   அனைவருடைய கடின உழைப்பையும் மற்றும்  தாராளமான பங்களிப்பையும் வழங்கியவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இவ்விழா அமைந்தது. விழாவின் இறுதி முடிவில்.தாமரை  நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad