• சற்று முன்

    வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மன் ஜலகண்டீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம்


    வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று இரவு ஸ்ரீ  அகிலாண்டீஸ்வரி அம்மன்   ஜலகண்டீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் 


    வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திரமான  இன்று இரவு ஸ்ரீ  அகிலாண்டீஸ்வரி அம்மன் ஜலகண்டீஸ்வரர்  திருக்கல்யாணமானது நடைபெற்றது மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு  சிறப்பு அலங்காரங்களை செய்து யாகமானது நடைபெற்றது இதில் பட்டு வஸ்திரங்கள் பூக்கள் பழங்கள் மூலிகைகளை யாகத்திலிட்டு பூர்னாஹதியானது நடைபெற்று சுவாமி மாலை மாற்று வைபவம் நடந்தது பின்னர்  ஸ்ரீ  ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்துடன் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது இதன் பின்னர் மகாதீபாராதணைகளும் நடந்தது பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சாமிதரிசனம் செய்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad