உலகெங்கும் வாழும் சமண சமய மக்களால் அமைதி மற்றும் அஹிம்சையின் திருவிழா
உலகெங்கும் வாழும் சமண சமய மக்களால் அமைதி மற்றும் அஹிம்சையின் திருவிழாவாக 'மஹாவீர் ஜெயந்தி' இன்று பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. சமண சமயத்தின் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மஹாவீரர் பிறந்த தினமே இந்த புனித நாளாகும்.
"வாழு, வாழ விடு" என்ற உன்னத தத்துவத்தை உலகுக்கு போதித்த இவர், வன்முறையற்ற வாழ்வு, உண்மை, திருடாமை, பிரம்மச்சரியம் மற்றும் ஆசை துறத்தல் ஆகிய ஐந்து மகா விரதங்களை வலியுறுத்தினார். உயிரினங்கள் அனைத்தின் மீதும் கருணை காட்ட வேண்டும் என்ற இவரது போதனைகள், காலங்களைக் கடந்தும் இன்றும் சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகத் திகழ்கின்றன.
இந்த நன்னாளில் மக்கள் சமணக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும், தான தர்மங்கள் வழங்கியும், அகிம்சை வழியில் உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்தும் மகிழ்கின்றனர்.






கருத்துகள் இல்லை