குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பானி பூரி வியாபாரி எடுத்து வந்த 1.50 லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை பறிமுதல்.


திருப்பத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பானி பூரி வியாபாரி எடுத்து வந்த 1.50 லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை பறிமுதல். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் திருச்சியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் தனது நகைகளை திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக திருச்சியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பத்தூருக்கு வந்தார். அப்போது காரப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கே ரோந்து பணியில் இருந்த பறக்கும் படையினர் லட்சுமணன் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை எடுத்து வந்தது தெரிய வந்தது.  அதனை பறிமுதல் செய்து திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்த அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியர் வரதராஜனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை