திருப்பத்தூரில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத் திறனாளிகளை அவமதித்து பேசியதாக குற்றம்சாட்டி திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 03.03.2026 அன்று நடைபெற்ற திமுக மேடையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டினர். இதனால் அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






கருத்துகள் இல்லை