குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பத்தூர் மாவட்டம்:ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்ரா பகுதியில் இன்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. வெயில் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பெய்த இந்த மழை பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

குறிப்பாக, பிற்பகல் நேரத்தில் துவங்கிய இந்த ஆலங்கட்டி மழை சில நிமிடங்கள் நீடித்து, பின்னர் சாதாரண மழையாக மாறியது. ஆலங்கட்டிகள் படர்ந்த காட்சி மக்கள் கவனத்தை ஈர்த்தது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த மழையை வரவேற்றுள்ளனர். சிலர் ஆலங்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்ததோடு, குழந்தைகள் உற்சாகமாக விளையாடியதும் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை