கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கினர்.
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 54 வது மாதமும் அன்னதானம் நிகழ்ச்சி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவன நாதசுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மார்க்கெட் சக்தி விநாயக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பாலமுருகன் ஸ்டோர் பாலமுருகன் வரவேற்றார்.
லட்சுமி டெக்கரேஷன் உரிமையாளரும், நகர்மன்ற உறுப்பினருமான சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம், ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கடம்பூர் மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் ஜெயராமன், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், விக்னேஸ்வரி எண்டர்பிரைசஸ் உரிமையாளர் அசோக், லட்சுமி நாட்டு மருந்து கடை பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பிள்ளையார் நத்தம் விஏஓ மந்திர சூடாமணி பொங்கல் பிரசாதம் வழங்கினார். அன்னதானத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் அப்பனராஜ் தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி , பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் பெரிய ராஜா, காளிராஜ், நடராஜன், தொழிலதிபர்கள் தனபால் ,கொல்லம் சேகர் ,ஆக்ரா காளிராஜ், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி ,தங்கராஜ் பசுமை இயக்கம் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். தேவி பிரேம்ஸ் கிளாஸஸ் உரிமையாளர் சண்முகசுந்தரம் நன்றியுரை கூறினார்.






கருத்துகள் இல்லை