• சற்று முன்

    ஆம்பூர் அடுத்த ஸ்டார் மழலையர் தொடக்கப்பள்ளி 31வது பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின்  31வது ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஸ்டார் பள்ளி  தலைமை ஆசிரியர் பெ.ஜெயசுதா அவர்கள்அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் ஆண்டு விழா கலை விழா,  பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக  பள்ளியின் தாளாளர் எஸ்.சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


    சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து சிறப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். அனுரத்னா, MBBS, DGO, அவர்கள் கலந்து கொண்டுகுத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்களின் நடனம் நாட்டியம் நாடகம்உரையாடல் நடைபெற்றது.

    குறிப்பாக இன்றைய அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக உள்ள செல்போன் பயன்பாடு,  youtube, பேஸ்புக், உள்ளிட்ட  பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை  மாணவர்கள் அருமையாக நடித்துக் காட்டினார்.

    விழாவில் இந்து மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் சி.குணசேகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கருணாகரப்பிள்ளை, ஆசிரியர் எழிலரசன், ஆசிரியர் உதயகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பாண்டியன், பொருளாளர் சபா ரத்தினம், தனியார் பள்ளி சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ்,  மாருதி, ஸ்டெல்லா, கல்பனா ஆகியோர்  பள்ளி மாணவர்களுக்கு ஷீல்டுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள்  வழங்கி  பாராட்டினர். ஸ்டார் பள்ளி நிர்வாகிகள்,.ரூபிசுப்ரமணி, சுபஸ்ரீ,  சுரேந்தர், சூர்யா, மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் பெற்றோர்களும்

    இளைஞர்கள் சிறுவர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா ஒருங்கிணைப்பினை பள்ளி ஆசிரியர்கள்பழனி, பூவழகி, லட்சுமி, சர்மிளா, S.பிரியா, சந்தியா, ரீனா, மேனகா, சரண்யா, உதயராணி,  E.பிரியா  ஆகியோர் செய்திருந்தனர்.

    இறுதியில் முடிவில் ஆசிரியை இசைத்தமிழ் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad