• சற்று முன்

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக கடம்பூர் ராஜூவை கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி புதன்கிழமை அறிவித்தார். இதையடுத்து, சென்னையில் இருந்து கோவில்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா ஆகியோர் ஊர் திரும்பினார். அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்புள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அம்பேத்கர், ராஜாஜி, அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர், வீரன் சுந்தரலிங்கம், இம்மானுவேல் சேகரன், வ உ சிதம்பரனார் ஆகிய தலைவர்களின் உருவச் சிலை மற்றும் காமராஜர் உருவப்படம் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


    நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலர் கவியரசன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் துறையூர் கணேஷ் பாண்டியன், வழக்குரைஞர் அணி மாவட்ட செயலர் சங்கர் கணேஷ், மகளிர் அணி செயலாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், போடு சாமி, அழகர்சாமி, பழனிச்சாமி, நகரச் செயலர் விஜய பாண்டியன், இளைஞர் அணி செயலர் வேல்முருகன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லட்சுமணப் பெருமாள், நகர் மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, மாணவரணி மாவட்ட செயலாளர் ராமர், அம்மா பாறை மாவட்ட இணைச் செயலாளர் சண்முக கனி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.பின்னர் வேட்பாளர் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளரும் கடம்பூர் ராஜூ


    காந்தி மைதானம் அருகே உள்ள சுக்கு காபி கடையில் சுக்கு காபி குடித்தவாறு அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad