"வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி-யாக பழனி பொறுப்பேற்பு!!!!
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேலையில் அரசுப் பணியாளர்கள் 1973 விதிகள் படி 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை பணியிடம் மாறுதல் தொடர்பாக.. தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு காவல் அதிகாரிகளை பணியிடங்களை மாற்றப்பட்டு வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பழனி என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பழனி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இவர் ஏற்கனவே வேலூர் உட்கோட்டத்திற்கு உள்ளடங்கிய காவல்துறையில் ஆய்வாளராகவும், அதேபோன்று பதவி உயர்வு பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக ஆரணி, போளூர் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றியதும் அதன் பிறகு பதவி உயர்வால் கூடுதல் கண்காணிப்பாளராக திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் பழனி அவர்களுக்கு "நம் மக்களின் சப்தம் நாளிதழ் மற்றும் ஜெம் டிவியின் சார்பில் அவரின் காவல்துறை பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை