• சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களே விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பேச்சு!!!!


    இளைஞர்கள் இடையே போதைப்பழக்கம் அதிகரித்து வரும் சூழலில், வாழ்க்கையில் சாதிக்க இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்ட வேண்டும்

    விளாப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தனது சொந்த செலவில் 25,000 ரூபாய் பரிசு மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய 5 கிட்களை வழங்கி கௌரவித்தார்.

    வட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள்

    விளாப்பாக்கம் பகுதியில் வட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் பிற மாவட்டங்களிலிருந்து பல அணிகள் பங்கேற்ற நிலையில், வெவ்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

    பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி


    போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் வெற்றி பெற்ற அணிக்கு 25,000 ஆயிரம் ரூபாய் பரிசாக தொகை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 5 கிட் பேக்குகளை வழங்கினார்

    ரூ.25,000 மதிப்பிலான 5 கிரிக்கெட் கிட்

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்கள் இடையே போதைப்பழக்கம் அதிகரித்து வரும் சூழலில், வாழ்க்கையில் சாதிக்க இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் இதன் மூலம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி வாழ்வில் முன்னேற முடியும் என அறிவுரை வழங்கினார் 


    ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad