தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி! மேலும் ஒருவர் படுகாயம் !
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மகன் தடிகாரன் (20), மரம் வெட்டும் தொழிலாளி. இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தடிகாரன் மற்றும சாலையில் நடந்து சென்ற மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்






கருத்துகள் இல்லை