வேலூர்மாவட்டம்,வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையோரம் இறந்த 7 ஆதரவற்றோர் உடல்கள் யாரும் உரிமை கோராத நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 உடல்களையும் காவல்துறையின் அனுமதியை பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன்
இன்று வேலூர் பாலாற்றில் உள்ள மயானத்தில் சடங்குகளை செய்து அவர் சொந்த செலவில் மலர்களை தூவி முறைப்படி நல்லடக்கம் செய்தார் இறந்தவர்களின் ஆன்மா சந்தியடையும் வழிபாடுகள் செய்யப்பட்டது இதுவரையில் சமூக சேவகர் மணிமாறன் 3500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்
சிறப்பு செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
Tags:
தமிழகம்