தமிழக வாழ்வுரிமை கட்சி லெட்டர் பேட்' கட்சி அல்ல. எச்சரிக்கை!!
தமிழக வாழ்வுரிமை கட்சி லெட்டர் பேட்' கட்சி அல்ல... எங்களை ஓரங்கட்ட நினைத்தால் 2026-இல் ஆட்சி அமையாது ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் எச்சரிக்கை!!!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் என். விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் தினேஷ் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்விற்கு முகமது காசிம், சம்பத், விமலா, சுப்பிரமணி, ரமேஷ் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் கி. சுதாகர், ஜம்புலிங்கம், காந்தி குமார், ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில் மாநில இலக்கிய அணி செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கம்பம் குணாஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் 12 வயதிலேயே தமிழ்த் தேசியம் மற்றும் மக்கள் உரிமைக்காகப் போராட்டக் களத்திற்கு வந்தவர். 40 ஆண்டுகால அரசியல் பயணம், 15 ஆண்டுகால கட்சி வரலாறு என முள்ளில் நடந்த பாதையை மலர் பாதையாக மாற்றியவர் வேல்முருகன். அவர் ஒரு பெயர்ச்சொல் அல்ல, அது போராட்டங்களின் 'வினைச்சொல்'.
தமிழகத்தில் தற்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் எனச் சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள். நடிகர் விஜய் உள்ளிட்ட பலர் கட்சி ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்கள்.
ஆனால், கொள்கை இல்லாத அரசியல் வெற்று அரசியல். நடிகர்களைத் திரையில் ரசிக்கலாம், ஆனால் மக்கள் நலனுக்காக ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாதவர்கள் நாட்டை ஆள நினைக்கக்கூடாது.
தத்துவமும், களப் போராட்டமும் கொண்ட வேல்முருகனிடம் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது. சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்தாலும், வேல்முருகன் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஒட்டுமொத்த அரசாங்கமும் திணறுகிறது. 2021 தேர்தலில் திமுக வெற்றிக்குத் தார்மீக ஆதரவு அளித்தோம்.
ஆனால், தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியை ஒரு 'லெட்டர் பேட்' கட்சி போலச் சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு 2026 தேர்தல் தகுந்த பதிலடி கொடுக்கும். வேல்முருகன் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்த கூட்டணி தான் 2026-இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பாசிச சக்திகளுக்கு எதிராகவும், வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமரசமின்றிப் போராடும் ஒரே இயக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சி தான். தமிழர்களின் வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ராணிப்பேட்டை போன்ற தொழில் நகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார். இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் திரளாகக் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை நகர செயலாளர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை