• சற்று முன்

    தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் மருமகன் தாக்கியதில் மாமியார் பலி.


    தூத்துக்குடி அத்திமரப்பட்டி வடக்குத்  தெருவைச் சேர்ந்த செல்லையா மனைவி பாப்பா(60). இவருடைய மகள் சுப்புராணி(40) என்பவரை  கூட்டாபுளி பிரம்மையாபுரம் சேர்ந்த லிங்கதுரை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் சுப்புராணி இறந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை லிங்கத்துரை தனது மனைவியின் நகைகளை கேட்டு பாப்பாவிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் ஆத்திரமடைந்த லிங்கத்துரை மாமியார் பாப்பாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லிங்கத்துரையை  கைது செய்தனர். நகைக்காக மாமியாரை மருமகன் தாக்கி கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad