• சற்று முன்

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி!!!!

    வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப் பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தெரிவித்தார். வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியாற்றிய மயில்வாகனன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாநகர துணை கமிஷனராக பணிபுரிந்த சிவராமன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக   பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    பின்னர் எஸ்பி சிவராமன் நிருபர்களிடம் கூறியதாவது முதலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதோடு, குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க தனிக்கவனம் செலுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாக புகார்கள் வந்தால் அது கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால் விசாரணையை துரிதப்பமைடுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்படும். போதைப் பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் சட்டவிரோதமாக  கொண்டு வரக்கூடிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீது கவனம் செலுத்தப்படும். 


    போதைப்
    பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் ஏதாவது புகார், விசாரணை தொடர்பான குறைகள் இருந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து என்னிடம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களின் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் நம்பர் விரைவில் வழங்கப்படும் பொதுமக்கள் அனைவரும் சட்டத்தை மதிக்கவேண்டும். எந்த புகார் கொடுத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் சட்டம் எல்லாருக்கும் ஒன்று தான் அதனால் எந்த பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு எஸ்பி அவர் கூறினார்.

    வேலூர் மாவட்ட எல்லை வழியாக தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது இதை கட்டுப்படுத்த எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு  போதைப்பொருட்களை குறிப்பிட்ட குற்ற வாளிகள் தான் தொடர்ச்சியாக கடத்தி வருகிறார்கள். ஒருவர் மீதே 10 முதல் 15 வழக்குகள் உள்ளன தேர்தலையொட்டி மாவட்ட எல்லையில் நிரந்தரமாக சோதனைச் சாவடிகள். இருக்கும். அதைத்தவிர  தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைக்க உள்ளோம். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது. சோதனைச்சாவடியில் கனரக வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுதப்படும். சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். முக்கியமாக பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே போதைப்பொருட்கள் விற்கும் மற்றும் வாங்கும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்


     ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad