கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் மாரத்தான் 2026
கன்னியாகுமரி மாவட்டத்தின் முன்னணி மூன்றாம் நிலை சிகிச்சை மருத்துவமனையாக விளங்கும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெறவுள்ள கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 – சீசன் 2 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நாகர்கோயில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் உள் நோயாளிகள் (In-Patient) பிரிவு வரவேற்பு பகுதியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.
“ஓடு, தானம் செய், மீண்டும் வாழ்வு கொடு” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கமாகும்.
செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு முழுமையான சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. சமூக நலனுக்கான தனது உறுதியின் ஒரு பகுதியாக, இந்த மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாரத்தான் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்திலிருந்து தொடங்கி, நான்கு வழிச்சாலை பைபாஸ் வழியாக சென்று, மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே நிறைவடையும்.
இந்த ஆண்டுக்கான மாரத்தானுக்கு 1,100-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால், அதிகாரப்பூர்வ முடிவு தேதிக்கு முன்பே பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 300 பெண்கள் பங்கேற்பது, பெண்களின் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிக்கும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.
மாரத்தான் பிரிவுகள்: 5 கி.மீ. – பொழுதுபோக்கு ஓட்டம் (Fun Run) 10 கி.மீ. ஓட்டம் அரை மாரத்தான் – 21 கி.மீ. இந்த மாரத்தான் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு, தொழில்முறை ஓட்ட மேலாண்மை மற்றும் முழுமையான மருத்துவ உதவிகளுடன் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிம்ஸ் ஹெல்த் குழுமம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்,டாக்டர் எம். ஐ. சஹதுல்லா,
“கிம்ஸ் ஹெல்த் மாரத்தான் 2026 – சீசன் 2 இன் மைய கருத்து உறுப்பு தானத்தின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவை அதிகரித்து வரும் நிலையில், தானம் செய்பவர்கள் குறைவாக இருப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த மாரத்தான் மூலம், ஒருவரின் உறுப்பு தானம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும், உறுப்பு தான கலாச்சாரத்தை சமூகத்தில் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
மேலும், இந்த மாரத்தான் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய விளையாட்டு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என்றும், சமூக பொறுப்புணர்வையும் மக்களின் பெரும் பங்கேற்பையும் வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ரேஸ் டைரக்டர் மற்றும் ஆலோசகர் – குடல்வயிறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெஜீஷ் செல்வகணேசன் கூறுகையில்
இந்த மாரத்தான் ஒரு போட்டி மட்டுமல்ல, உயிர்களை காப்பாற்றும் ஒரு இயக்கம் என்றும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில்
டாக்டர் தாணு – மருத்துவ கண்காணிப்பாளர், கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில், திரு. கிரிபேஷ் ஹரிஹரன் – CHRO & CEO (SBUs) மற்றும் தலைமைத் செயல்திட்ட அதிகாரி கிம்ஸ் ஹெல்த் குழுமம், திரு. கிரண் – குழும மனிதவளத் தலைவர், Quality Care India Ltd., டாக்டர் தீபக் – பிராந்திய மருத்துவ இயக்குனர், கிம்ஸ் ஹெல்த் குழுமம், திரு. நவீன் – செயல்திட்ட அதிகாரி, QCIமற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை