இது என்னா சாவு வீடா அழுதுன்னு வர… பிரஸ் காரங்க கிட்ட போய்ட்டா நாங்க நடவடிக்கை எடுத்து விடுவோமா?
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் செந்தில்குமாரி (40) என்பவர் கேத்தாண்டபட்டி அருகே உள்ள தனது விவசாய நிலத்திற்கு கடந்த 5ம் தேதி தனது ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வண்டியை நிலத்தில் நிறுத்தி விட்டு விவசாய பணிகளை மேற்கொண்டு உள்ளார். அப்போது மர்ம நபர்கள் யாரோ அவரது இருச்சக்கர வாகனத்தை திருடி சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காணாமல் போன வண்டியை கண்டுபிடித்து கொடுங்கள் என்று வண்டி காணாமல் போன அதிர்ச்சியில் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழுது கொண்டே சென்றுள்ளார். அங்கு பண்ணையில் இருந்த போலீசார் மிகவும் அலட்சியமாக போய் புகார் எழுதி கொண்டு வா என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்த பெண்ணுக்கு அங்கு இருந்த செய்தியாளர்கள் உதவி செய்துள்ளனர். அதன் பின்னர் புகாரை காவல் நிலையத்தில் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இது என்னா சாவு வீடா அழுதுகிட்டே வர, அதுவும் இங்க வராம பிரஸ் காரங்க கிட்ட போய் இருக்க அவங்க நடவடிக்கை எடுத்து விடுவாங்களா என பாதிக்கபட்ட பெண்ணை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி போ போன் பண்ணுவாங்க என அலட்சியமாக பதில் அளித்து அனுப்பி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த பெண் செய்தியாளர் ஒருவருக்கு போன் செய்து இது என்ன சாவு வீடா என்று கேட்கிறாங்க சார். என் வண்டி காணாமல் போச்சி என்று போனால் இப்படி பேசுறாங்க என்று புலம்பி உள்ளார். பாதிக்கப்பட்டு புகார் அளிக்க சென்ற பெண்ணை அலட்சிய படுத்தும் விதமாக போலீசார் நடந்து கொண்டதை பாதிக்கபட்ட பெண் புலம்பும் ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது






கருத்துகள் இல்லை