மடையப்பட்டு ஊராட்சியில் திராவிடப் பொங்கல் விழா!
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில் திராவிடப் பொங்கல் விழா மற்றும் புடவை, வேட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மடையப்பட்டு ஊராட்சியில் நடைபெற்றது. இதில் திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு பானையில் பொங்கல் வைத்து சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு புடவை, வேட்டிகள், பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார். இந்த எளிய நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, பேரூராட்சி செயலாளர் ஆர்.பெருமாள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.சாரதி, கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மதுகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை