• சற்று முன்

    பேரணாம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் ஐந்து கிலோ எடை உள்ள மண்ணுளி பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.


    பேரணாம்பட்டி குடியிருப்பு பகுதிக்குள் பிடிபட்ட சுமார் ஐந்து கிலோ எடை உள்ள மண்ணுளி  பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள். 


    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காமராஜர் நகர் பகுதியில் காலியாக இருந்த மைதானம் ஒன்றில் சில இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதியில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் அருகே சென்று பார்த்தபோது அது மண்ணுளிப் பாம்பு என்பது தெரியவந்தது பின்னர் பாம்பை  ஒரு பாத்திரத்தில் பிடித்த பத்திரமாக எடுத்து வந்த போது நூற்றுக்கு மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மண்ணுளிப் பாம்பை பார்த்து வியந்தனர் பின்னர் பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஐந்து கிலோ எடையுள்ள  மண்ணுளி பாம்பை பிடித்து பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் குடியிருப்பு பகுதிக்குள் பிடிபட்ட மண்ணுளி பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad