நெமிலி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம், அமைச்சா் ஆர். காந்தி பங்கேற்பு!!!
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் தாயுமானவர் அன்புக்கரங்கள் இன்னுயிர் காப்போம், போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக அரங்கில் தமிழ் நாட்டை திரும்பிபார்க்கவைத்துக்கொண்டிருக்கிறார். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர். சூர்யா வெற்றி கொண்டான், தலைமை செயற்குழு உறுப்பினர். மு. கண்ணையன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மணிகண்டன், இளைஞர் அணி அமைப்பாளர். விஜய் தேவகுமார், கொள்ளுமேடு கிளை செயலாளர். மோகன், கிளை பிரதிநிதி. பிச்சமுத்து மற்றும் திமுக கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தெருமுனை கூட்டத்தினை சிறப்பித்தார்கள்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.






கருத்துகள் இல்லை