தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய உறுதியளிப்பு திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு பாராட்டு
வேலூர்மாவட்டம்,.வேலூரில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆலோசனை கூட்டமானது நடந்தது இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் பாபு, தீனதயாளன் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதன் பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஜாக்டோ ஜியோவிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் ஒரு நபர் கமிஷன் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும் தமிழக அரசு புதிய ஓய்வூதிய உறுதியளிப்பு திட்டத்தை இன்று அறிவித்துள்ளது அதன் படி ஓய்வு பெறும் நாளில் பெறும் ஊதியத்தில் 50 சதவிகிதம் பென்ஷனாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதும் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் பென்ஷனே பெறாமல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கருணை பென்ஷன் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்
தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய உறுதியளிப்பு திட்டத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது






கருத்துகள் இல்லை