• சற்று முன்

    கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்



    கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் - திருவாதிரை திருவிழா  ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    ஆருத்ரா தரிசனம் என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன்  உடனுறை ஶ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் இன்று திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதற்காக அதிகாலை  கோவில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜையும், இதனை தொடர்ந்து மண்டபத்தில் கும்பக் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீ நடராஜா பெருமாளுக்கும் மாணிக்கவாசகர் சுவாமிக்கும் பால்,தயிர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 21வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.பின்னர்  கோ பூஜை மற்றும் ஶ்ரீ நடராஜா பெருமாளுக்கும் மாணிக்கவாசகர் சுவாமிக்கும் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.இந்த பூஜைகளை காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். சிவகாமி அம்பாள் ஆனந்த நடராஜர் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad