ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 659 ரேசன் கடையில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 884 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் தைத்திருநாள் பொங்கல் பண்டிகைக்காக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.3000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர், அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய இடங்களில் செயல்பட்டு சுமார் 659 நியாய கடைகள் மூலமாக 3 லட்சத்து 51 ஆயிரத்து 884 ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை, மற்றும் அரிசி, சர்க்கரை, மற்றும் 3000 ரூபாய் ரொக்கம் ஆகியவை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கினார் முதற்கட்டமாக நவல்பூர் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்..
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தாங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் , கூட்டுறவு சங்க இணைபதிவாளர் பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.






கருத்துகள் இல்லை