ஈரோட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ்., அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி இரண்டாம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) மு.ப.சுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர்.






கருத்துகள் இல்லை